அரியனேந்தல் கிராமத்தில் நல வாழ்வு மையம் திறப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியணேந்தல் கிராமத்தில் அரசு நல வாழ்வு மையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 50 கோடி மக்களுக்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ சிகிச்சைக்காக கொடுக்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதோருக்கு 2022 க்குள் வீடு கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தில் 1000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ஆண்டும் 4.6 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்படுகின்றனர்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர் மீனாட்சி, தொழுநோய் துறை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.