நிலக்கோட்டை அருகே 30 லட்சம் மதிப்பில் அம்மா ஜிம் திறப்பு விழா..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சி, மைக்கேல் பாளையத்தில் அம்மா ஜிம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் கலந்து கொண்டு ஜிம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார. விழாவில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மைக்கேல் பாளையத்தில் உருவாக்கப்பட்ட ஜிம் இப்பகுதி பள்ளி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும், உதவியாக இருக்கும் என எம்பி உதயகுமார் பேசினார். இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், நிலக்கோட்டை நகரக் கழகச் செயலாளர் சேகர் ,மைக்கேல் பாளையம் அதிதூதர் பங்கு தந்தை சேசுராஜ, ஊராட்சிக் கழகச் செயலாளர் சேசுராஜ், கோட்டூர் ஊராட்சி மன்ற செயலாளர் பாண்டியராஜன், கட்டிட அரசு ஒப்பந்ததாரர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.