Home செய்திகள் காட்டெருமையால் ஊட்டியில் மீண்டும் பரபரப்பு-வீடியோ செய்தி..

காட்டெருமையால் ஊட்டியில் மீண்டும் பரபரப்பு-வீடியோ செய்தி..

by ஆசிரியர்

ஊட்டி நகரில் சுமார் 20 மணி நேரமாக பரபரப்பை ஏற்படுத்திய காட்டெருமை பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அரசினர் தாவரவியல் பூங்கா வளாகத்துக்குள்துரத்தப்பட்டது.

வனத்துறையினரின் தீவிர முயற்சியால் மதுவானா வழியாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு காட்டெருமை விரட்டியடிக்கப்பட்டது. அங்கு சென்றதும் தண்ணீர் குடித்து காட்டெருமை தனது தாகத்தை தீர்த்து கொண்டது. இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 2 மணி நேரம் வனத்துறையினர் போராடி காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டெருமை தொடர்ந்து நகரப் பகுதிகளுக்குள் சுற்றி வருவதால் அதை வேறு இடத்துக்குக் கொண்டு செல்வது குறித்து ஊட்டியில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் சுமந்த் சோமன், கால்நடைத் துறை இணை இயக்குநரான டாக்டர் மனோகரன், காவல் துறையினர், வனத்துறை துணை அலுவலர் சரவணன் வனச்சரகர்கள் முத்துகிருஷ்ணன் சிவா வனத் துறை அதிகாரிகள், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மீண்டும் கோடப்பமந்து பகுதியில் உள்ள ஆரணி அவுசில் திரிந்த காட்டெருமை அங்குள்ள ஆள் இல்லா வீட்டுக்குள் அடைகலம் புகுந்தது. குடியிருப்பு பகுதி என்பதால் பரபரப்புடன் பயமும் ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் மிகுந்த கண்காணிப்புடன் புற்கள் தண்ணிர் வழங்கினர்.

பின்னர் காட்டெருமைக்கு மயக்க ஊசி போட்டு முதுமலை பகுதியில் விடப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான உத்தரவு டெல்லியில் இருந்து வர வேண்டும் என்பதால் தாமதமாகிறது. இந்நிலையில் இன்று இரவு மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டபடும் என தெரிகிறது.

தொகுப்பு:/அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், ( பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!