ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் முறையீடு நாளை (03/11/2020)விசாரணை…..

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு வழக்கறிஞர்கள் நீலமேகம் முகம்மது ரஃபி ஆகிய 2 பேர் இன்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தனர்.

அதில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த சூதாட்டத்தை தடை செய்ய தடை விதிக்க வேண்டும் . மேலும் ஆன்லைன் ரம்மி விளம்பரம் குறித்த நடித்த நடிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு, இதனை மனுவாக மனுவாக தாக்கல் செய்தபின் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்