முகவை மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..

முகவை மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு கூட்டம் 04/11/2017 அன்று இராமநாதபுரம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரு சுகாதார மாவட்டம் சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சக்திமுத்து கிருஷ்ணன் மாவட்ட தலைவர் திரு.சாகுல் ஹமீது மாவட்ட செயலர் திரு.மகேந்திரன் மாவட்ட ஆலோசகர் திரு.பொன்னம்பலம் மாவட்ட பொருளாளர் திரு.ப.கோபிநாத் மாவட்ட துணைத்தலைவர் திரு.நாகேந்திரன் மாவட்ட துணைத்தலைவர் திரு.ஆலம்கீர் மாவட்ட இணைச்செயலர் திரு.முனியசாமி மாவட்ட இணைச்செயலரா் திரு.விசயகுமார் முகவை சுகாதார மாவட்ட அமைப்பாளர் திரு.சந்தனராசு பரம்பை சுகாதார மாவட்டத்தின் அமைப்பாளர் திரு.கோவிந்தகுமார் அவர்களையும் செயற்குழு உறுப்பினர்கள்:- திரு.குமார். இராமநாதபுரம் திரு.கிளைட்டன் திருப்புல்லாணி திரு.முனியாண்டி மண்டபம் திரு.இளம்பரிதி திருவாடானை திரு.இராமநாதன் ஆர்.எஸ்.மங்கலம் திரு.இராச சேகர் பரமக்குடி திரு.நேதாஜி முதுகுளத்தூர் திரு.நரசிம்மன் கமுதி திரு.காளிமுத்து கடலாடி திரு.வேல்முருகன் நயினார் கோவில் திரு.ராச கோபால் போகலூர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் டெங்குவை காரணம் காட்டி ஊழியர்களை பழிவாங்குதல் கூடாது எனவும், பதவி உயர்வு பெற்றும் ஆய்வ நுட்புனர் பதவியில் தொடர்ந்து பணி செய்யும், சுகாதார ஆய்வாளர்களை பணி இடத்துக்கு அனுப்ப வழிவகை செய்யுமாறு நிர்வாகத்தை வேண்டிக் கொண்டும் சுகாதார ஆய்வாளர் என மீண்டும் பதவியை மாற்ற வேண்டும் எனவும், நில வேம்பு கசாயத்தை சம்பந்தப்பட்ட சித்த மருத்துவ துறையினரை வைத்தே விநியோகம் செய்ய வலியுறுத்தியும், மாற்றுத்துறையினர் நம்மை மேற்பார்வை செய்வதை அனுமதிக்க இயலாது எனவும், பணி நேரங்களை மாறுதல் செய்ய கூடாது எனவும், பொது சுகாதார சட்டத்தை திருத்தம் செய்து சுகாதார ஆய்வாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்க துறை அலுவலர்களை வேண்டிக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.