Home செய்திகள் தென்காசியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி; அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்பு..

தென்காசியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி; அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்பு..

by ஆசிரியர்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியின் விவரம் பின்வருமாறு, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே நான், அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும் பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com