Home செய்திகள் இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா..

இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா..

by ஆசிரியர்

இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. இதில் ஊட்டச்சத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. தென்காசி மாவட்ட மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் தேசிய மாத ஊட்டச்சத்து விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவ‌ட்ட‌ம் கடையநல்லூர் ஒன்றியம் இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்ட சத்து மாத விழா நடைபெற்றது. திருநெல்வேலி மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், குழந்தை உரிமையும் நீங்களும் பெங்களூரு என்ற நிறுவனமும் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியைகள் குருலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் வேலம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார். புஷ்பா ஊட்ட சத்து அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது, குழந்தைகள் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள், பருப்பு வகைகள் சாப்பிட வேண்டும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட துரித உணவு வகைகளை வாங்கி சாப்பிடக் கூடாது. ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொறி உருண்டை, பேரிச்சம் பழம், நில கடலை ஆகியவைகளை சாப்பிட வேண்டும். என்று குறிப்பிட்டார். விழாவில் பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் தங்கம் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com