கீழக்கரை மக்களின் ஆரோக்கியத்தை பேண வடக்குத் தெருவில் புதிய விற்பனை நிலையம்..

அவசரமான உலகத்தில் உணவு முதல் அனைத்திலும் அவசரம். உண்ணும் உணவிலும் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் பல வகையான கலப்படங்கள், ஆகையால் மக்கள் மத்தியில் புதிய புதிய நோய்கள். இந்த நோய்களில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி ரசாயணம் கலப்படம் இல்லாத இயற்கையான உணவு மட்டுமே.

ஆனால் செயற்கை உணவு தானியங்கள் நிறைந்த சந்தையில் இயற்கை உணவை காண்பதே அரிதாகிவிட்டது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி எதிர்புறம் நவாஸ்கான் என்பவர் இயற்கை உணவு தானியங்கள் விற்பனை நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இங்கு சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள், மளிகை பொருட்கள், இயற்கை இனிப்பு வகையான நாட்டு சக்கரை, பனை வெல்லம், மலைத் தேன், இயற்கை மூலிகை மூலம் தயாரான சோப்பு வகைகள் ஆகியவை அனைவரும் பயன் பெறும் வகையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார். இவருடைய தொழில் மேலும் சிறப்புற கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.