கீழக்கரை வடக்குத் தெரு தொழுகை பள்ளியில் திருட்டு..

கீழக்கரை வடக்குத் தெரு மஸ்ஜிதுல் மன்பஃயில் இன்று காலை தொழுகை நேரத்தை காட்டக்கூடிய கடிகாரம் திருடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை தொழ வந்தவர்கள் பள்ளியில் தொழுகை நேரத்தை காட்டும் கடிகாரம் திருடு போனதை அறிந்து காவல்துறையிடம் ஜமாத் நிர்வாகம்  சார்பாக புகார் தெரிவித்துள்ளனர். இத்திருட்டு சம்பவம் அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் இன்று மின்சார தடை உள்ளதால் உடனடியாக துப்புதுலக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..