
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் இக்கிராம மக்களின் சுமார் பல ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்றதலைவர் செல்விஜெயசீலன் தலைமையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் டெய்சி ராணிஜோசப் . நாகராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை மேற்பார்வையாளர் திருமுருகன், அரசு ஒப்பந்ததாரர் ஜெயபிரகாஷ் வார்டு உறுப்பினர்கள் சிவகாமி ரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.