Home செய்திகள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம். வியாபாரிகள் 2 மணிநேரம் போராட்டம்

நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம். வியாபாரிகள் 2 மணிநேரம் போராட்டம்

by mohan

  நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் ஏராளமான இடங்கள் கடைகளாக கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்மட்ட அதிகாரிகளின் உத்தரவுப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டோரா மூலம் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் யாரும் கடைகளையும், ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள  கூரையை உள்பட் எதையும்  அகற்ற முன்வரவில்லை . இதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் 1.11.2019 தேதி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நிர்வாகத்தால் அனைத்து அகற்றப்படும் என கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தது.அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நிலக்கோட்டை பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களோடு  ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றக்கூடாது என கோரிக்கை வைத்து கால அவகாசம் கேட்டனர். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் விரைந்து சென்று வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக நிலக்கோட்டை செயல்அலுவலர் கோட்டைச்சாமி சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி மற்றும் நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் ஆகியோர்கள் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் ஏற்கனவே பலமுறை அறிவிப்பு செய்தோம். வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வில்லை. நிச்சயமாக உடனடியாக அகற்றப்படும் வியாபாரிகள் கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு வியாபாரிகள் அனைவரும் 5 நாட்கள்  அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கட்டிடங்களாக உள்ளதை அகற்றிக் கொள்ள 2 நாட்கள்  கால அவகாசம்  கொடுத்தும், மற்றும் தகரம், கூரை காலி அமைக்கப்பட்டிருந்த  உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற உத்தரவிட்டார்.    . வியாபாரிகள் சுமார் 2 மணிநேரம் கடைகளை எடுக்கக்கூடாது எனக்கூறி போராட்டம் நடத்தினார்கள்.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!