Home செய்திகள் நிலக்கோட்டை வாரச்சந்தையில் வரி கூடுதலாகக் கேட்டதாக வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை.

நிலக்கோட்டை வாரச்சந்தையில் வரி கூடுதலாகக் கேட்டதாக வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை.

by mohan

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த வாரச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வாரச்சந்தை கோடி அவர்கள் வியாபாரம் செய்வது வழக்கம். வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இடம் பேரூராட்சியில் இருந்து ஏலம் எடுத்தவர்கள் மூட்டைக்கு பத்து ரூபாய் வசூல் செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் மற்றும் பேரூராட்சி கூறிய படி மூடைக்கு பத்து ரூபாய் வசூல் செய்யவேண்டும் என்ற நிலையில் கூடுதலாக ரூபாய்க்கு அதற்குரிய ஏற்கனவே பேரூராட்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் வியாபாரிகள் முறையிட்டு இருந்தனர். இதனை ஏற்று நேற்று நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி வியாபாரிகளிடம் வழக்கம்போல் வரி வசூல் செய்வார்கள் என்று கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. வியாபாரிகளுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று கூறிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காய்கறிகளைக் கொண்டு வந்த வியாபாரிகள் அதிகாலை 3 முதல் திண்டுக்கல் , தேனி, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்த காய்கறிகளை தற்போது வரை வாரச் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமலும் விற்பனை செய்ய முடியாமலும் காய்கறிகள் அனைத்தும் வாகனங்களில் அப்படியப்படியே இறக்கப் படாமல் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்றுகூடி நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து வியாபாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com