திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு அருகே மினி பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் வரவேற்று பேசினார். விழாவில் நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் முன்பு உள்ள அதிமுக கட்சி கட்சிக் கொடியில் கட்சிக் கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றி வைத்து பின்னர் நிலக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி,முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன், நகர பொருளாளர் பூக்கடை சரவணன், மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
55
previous post
பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செய்முறை விளக்கம் .
next post
You must be logged in to post a comment.