Home செய்திகள் சமூக விரோத செயல்களின் கூடாரமாக திகழும் பாழடைந்த நிலக்கோட்டை காவலர் குடியிருப்பு

சமூக விரோத செயல்களின் கூடாரமாக திகழும் பாழடைந்த நிலக்கோட்டை காவலர் குடியிருப்பு

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில், நிலக்கோட்டை, வத்தலகுண்டு,பட்டிவீரன்பட்டி,விருவீடு,விளாம்பட்டி,அம்மைய நாயக்கனூர், போன்ற ஊர்களில் (நிலக்கோட்டை தவிர்த்து) இருக்கும் காவல் நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகளுக்கு காவலர் குடியிருப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், மகளிர் சிறைச்சாலை, முக்கியமாக நிலக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகமும் நிலக்கோட்டையில் தான் உள்ளது.இருந்தும் காவலர் குடியிருப்புகள் இல்லாத சூழ்நிலையில் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஆகையால் இங்கு பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் ஊர்களிலும் வசிக்கும் சூழ்நிலை உள்ளது.இந்த பாழடைந்த நிலையில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அடிக்கடி குற்றச்சாட்டு எழுவது உண்டு.அது சமயம் மட்டும் போலீசார் ரோந்து வருவது வழக்கம்; பிறகு மீண்டும் அதே பழைய சூழ்நிலை தான்.இங்கு உட்கார்ந்து மது குடிப்பதும் கஞ்சா குடிப்பதும் சில நேரங்களில் விபச்சாரங்கள் கூட நடைபெறுவதாகவும் இப்பகுதி பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.இப்பகுதியில் சென்றுவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதையில் இருக்கும் சிலர் தொந்தரவு கொடுப்பதாகவும் இதனால் இப்பகுதி பெண்கள் அச்சத்தோடு தான் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.எனவே இந்த பாழடைந்த கட்டிடங்களை இடித்து புதிய காவலர் குடியிருப்புகள் கட்டி தந்து இங்கு பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு பணிச்சுமைகளை லேசாக்க வேண்டும்.அது வரையில் இந்த கட்டிடத்தை தரைமட்டமாக இடித்து சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் பாதுகாத்து பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com