Home செய்திகள் வத்தலக்குண்டு பச்சையம்மன் ஓட்டு கருப்புசாமி கோவிலில் பொதுமக்கள் வழிபாடுகள் செய்ய தடை. தாசில்தார் உத்தரவு

வத்தலக்குண்டு பச்சையம்மன் ஓட்டு கருப்புசாமி கோவிலில் பொதுமக்கள் வழிபாடுகள் செய்ய தடை. தாசில்தார் உத்தரவு

by mohan

நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, வத்தலக்குண்டு வெங் கிட்டாபட்டியில் அமைந்துள்ள பச்சையம்மாள் ஒட்டு கருப்புசாமி கோவில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கடந்த 07.10.2021 அன்று நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவின்படி கோவில் சாவியை பொதுவான நபரிடம் ஒப்படைத்து சாமி கும்பிடும்மாறும், தீபாவளிக்கு பின்பு கோவில் பங்காளிகள் அனைவரையும் அழைத்து இறுதி முடிவு எட்டப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு படி ஒரு தரப்பினர் நடந்து கொள்ளவில்லை எனவும், அதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டில் கடந்த 10.12.2021 அன்று வத்தலகுண்டு சமுதாயக் கூடத்தில் நிலக்கோட்டை தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெறுகிறது என இருதரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கலந்து கொள்ளாத காரணத்தால் வெங் கிட்டாபட்டியில் அமைந்துள்ள பச்சையம்மாள் ஒட்டு கருப்புசாமி கோவில் சாமி கும்பிடுவது சம்பந்தமாக இருதரப்பு இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இருதரப்பினருக்கும் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்படுகிறது என உத்தரவிட்டு அதனை செயல்படுத்த வத்தலகுண்டு போலீஸ் மற்றும் வத்தலகுண்டு வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அறிக்கையை அனுப்பி உள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com