Home செய்திகள் அம்மையநாயக்கனூர் அருகே உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர்.

அம்மையநாயக்கனூர் அருகே உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மாவுத்தன் பட்டியில் கலாராணி வயது 69 உணவின்றி தவிப்பதாக அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சண்முக லட்சுமி நேரமாக மாவுத்தன் பட்டி உணவின்றி தவிக்கும் கலாராணி இருப்பிடத்திற்குச் சென்றார். அங்கு மிகுந்த கிழிந்த உடையும் தலை கூட சீவாமல் மிகுந்த அளவில் பரிதாபத்திற்குரிய நிலையில் கலாராணி கிடந்தார். இதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி உடனடியாக ஆட்டோ வரவழைத்து மூதாட்டிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குளிக்க வைத்து மற்ற ஏற்பாடுகளைச் செய்து அதன் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தார். ஒரு கிராமத்தில் உணவின்றி தவித்த மூதாட்டிக்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நேராக வந்து அடிப்படை பணிகளைச் செய்து எந்தவிதமான கூச்சமுமின்றி இன்முகத்தோடு மூதாட்டிக்கு ஆதரவளித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி கிராம பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது உடன் போலீசார் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் இருந்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் மிகுந்த அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி கூறியதாவது: இரண்டு தினங்களுக்கு முன்பு போலீசாரிடம் யாரேனும் ஆதரவின்றி இடமின்றி உணவின்றி முதியவர்கள் பாதுகாப்பின்றி இருந்தால் உரிய தகவல் தெரிவிக்குமாறு கூறினேன் அதன் அடிப்படைகள் எனக்குத் தகவல் கிடைத்தது அதனைத் தொடர்ந்து நேராகச் சென்று என் கடமையைச் செய்தேன் என்று கூறினார். இவர்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் இன்னும் நாட்டில் மனித நேயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கப் படுகிறது இப்படிப்பட்ட சம்பவங்கள். இதனைப் பார்த்த கிராம மக்கள் தமிழக காவல்துறைக்கு கிராம மக்களை சல்யூட் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!