Home செய்திகள் அணைப்பட்டியில் இந்து முன்னணி வீர ஆஞ்சநேயர் கோயிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்.

அணைப்பட்டியில் இந்து முன்னணி வீர ஆஞ்சநேயர் கோயிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பொது மக்கள் வழிபாடு செய்ய சர்வ மஹாலய அமாவாசையை முன்னிட்டு திடீரென கொரானா தொற்று பரவுவதைத் தடுக்க இந்து ஆலயங்களை அரசாங்கம் முட உத்தரவிட்டது. இதன்படி நேற்று அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் கதவு மூடப்பட்டு இருந்தது. இதை அறிந்த நிலக்கோட்டை பகுதியில் உள்ள இந்து முன்னணியினர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்பி.ஜி. போஸ் மாவட்ட துணைத் தலைவர் சி.கே.ராஜா தலைமையிலும், மாவட்டத் தலைவர் வேலுச்சாமி முன்னிலையிலும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் முன்பாக திடீரென திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அங்கு வந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியிடம் அரசு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று கூறினார். இருப்பினும் தடையை மீறி ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் கதவு திறக்கப்பட்டது பின்னர் பொதுமக்கள் உறவுகள் வரிசையாகச் சென்று வீர ஆஞ்சநேயர் கோவில் தரிசனம் செய்தும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டுச் சென்றனர். திடீரென ஆர்ப்பாட்டம் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.படவிளக்கம் அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com