Home செய்திகள் நிலக்கோட்டை அருகே காற்றில் பறந்த தமிழக அரசின் உத்தரவு ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அணைப்பட்டி வைகை ஆற்றில் குவிந்ததனர்.

நிலக்கோட்டை அருகே காற்றில் பறந்த தமிழக அரசின் உத்தரவு ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அணைப்பட்டி வைகை ஆற்றில் குவிந்ததனர்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி ஆஞ்சநேயர்  கோவிலில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி ஏராளமான பக்தர்கள் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்க கோவிலைச் சுற்றி வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வர வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி வந்தவர்களை தடுக்க  காவல் துறையினர் தவறியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது, கொரோனா தொற்று காரணமாக, தமிழக அரசின் பரிந்துரைப்படி அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் சார்பாக 8-தேதி இரவு வரை சேவார்த்திகள் தரிசனம் கிடையாது’ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் திண்டுக்கல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சோழவந்தான், உசிலம்பட்டி, விருவீடு மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்  இன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர வைகை ஆற்றில் குவிந்தனர்.  கோவில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்ட நிலையில் கோவிலை சுற்றி ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்ய குவிந்து, வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். யாரும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மூன்றாம் அலை குறித்த தமிழக அரசின் உத்தரவையும் மதிக்காமல் ஏராளமானோர் குவிந்ததால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.படவிளக்கம் அணைப்பட்டி வைகையாற்றில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com