
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேனி – திண்டுக்கல் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை தேனியிலிருந்து சென்னை நோக்கி பொலிரோ காரில் சென்னை கௌளத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த சின்னன் மகள் விஜயன்(40) சைரன் வைத்த பொலிரோ காரில் சென்றார் அப்போது வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலை லட்சுமிபுரம் டோல்கேட் அருகே பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது பொலிரோ ஜீப் பொலிரோ ஜீப்பில் போலீஸ் என எழுதப்பட்டு சைரன் வைத்தTN 37 0515 என் உள்ள காரில் விஜயன் வந்து கொண்டிருந்தார் அவர் வாகனத்தை சோதனை செய்த போலீசார் அவரிடம் யார் என்று கேட்டபோது தான் போலீஸ்என்று கூறியுள்ளார் . போலீசார் மீண்டும் விசாரணை செய்தபோது தான் சென்னை கமிஷனர் என்று கூறியுள்ளார் அவரின் முன்னுக்கு பின்னான தகவலால் சந்தேகமடைந்த காவல்துறையினர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தியதில் அவர் போலி போலீஸ் கமிஷனர் என தெரியவந்துள்ளது இதனையடுத்து அவர் வந்த காரையும் அடையாள அட்டையும் ஒரு கைத்துப்பாக்கியும் கைப்பற்றி பறிமுதல் செய்து அவரை பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வைத்து திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் உட்பட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.