Home செய்திகள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி  தேர்தல் வாக்கு எண்ணிக்கை 02.05.2021 தேதியன்று நடைபெற இருப்பதை முன்னிட்டு அனைத்து வேட்பாளர்களுக்கும் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பையா வரவேற்று பேசினார். கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் கூறியதாவது: நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற   2. 5 . 2021 ஆம் தேதியன்று திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மேற்கு வட்டம் சில்வார்பட்டி கிராமம் மாங்கரை பிரிவு என்ற முகவரியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொருளியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான O2.05.2021 ஆம் தேதி அன்று காலை 5:30 மணிக்கு தபால் வாக்குகள் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இருப்பதிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் அரசு ஊழியர்கள் உட்பட தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 5 மேஜைகளும் ,சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணுவதற்காக 14 மேஜைகள் போடப்பட்டு, ஒரு மேஜைக்கு வாக்கு எண்ணுவதற்கு ஒரு மேற்பார்வையாளர் ஒரு உதவியாளரும் மற்றும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஒருவரை  நுண் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முதற்கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி அதே போன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு . மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி 8:30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்பில் ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளில் உள்ள பிரதிநிதிகளாக உள்ள யாருக்கும் அனுமதி கிடையாது. தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உட்பட வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவரும் கொரானா பரிசோதனை செய்து சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் அவ்வாறு சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாழ்க்கை மையத்திற்கு அனுமதிக்கப்படும் என்னைவிட முகவர் ஒவ்வொருவரும் வாக்குப்பதிவு ரகசியத்தை காத்திட உதவிபுரிய வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அதை மீறுகிற வகையில் 2. 5 . 2021 அன்று அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வேட்பாளர்களும் வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது சுமூகமாகவும், அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தேமுதிக மேற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் சங்கிலி பாண்டியன், மற்றும் சுயேட்சை வேட்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com