Home செய்திகள் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முடங்கிப்போன தேமுதிக வேட்பாளர் பிரச்சாரம்கூட்டணி கட்சியினர் ஆதங்கத்தில் வாக்கு சேகரிப்பு.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முடங்கிப்போன தேமுதிக வேட்பாளர் பிரச்சாரம்கூட்டணி கட்சியினர் ஆதங்கத்தில் வாக்கு சேகரிப்பு.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க ,தே.மு.தி.க கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க வேட்பாளர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் நிலக்கோட்டை நால் ரோட்டில் ஒரு நாள் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சென்றார். அதேபோன்று அ.ம.மு.க கட்சி நிறுவனரும், கட்சி பொதுச் செயலாளருமான டி.டி.வி தினகரன் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் முன்பு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சென்றார். இந்த 2 நிகழ்வுக்கு மட்டுமே நிலக்கோட்டை சட்டமன்ற தேமுதிக வேட்பாளர் ராமசாமி பிரச்சாரத்திற்கு வந்தார். அதன் பின்னர் நிலக்கோட்டை தொகுதியில் பக்கமே வரவே இல்லை. தேமுதிக கட்சியினரும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக கட்சியினரும் பிரச்சாரத்திற்காக நிலக்கோட்டை பகுதியில் 2 நாட்கள் அனுமதி வாங்கினார்கள். வத்தலகுண்டு பகுதியில் ஒரு நாள் அனுமதி வாங்கினார்கள். ஆனால் அனுமதி பெற்றதைத் தவிர பிரச்சாரத்திற்கு தேமுதிக வேட்பாளர் ராமசாமி வரவே இல்லை.. அனுமதி வாங்கி விட்டோம் என்று தேமுதிக , அம முக கட்சியினருடன் இணைந்து நிலக்கோட்டை பகுதியில் மட்டுமே ஒரே ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தப் பிரச்சாரத்தில் முதல் நாளிலேயே மைக்கேல் பாளையத்தில் ஒருவர் டிடிவி தினகரன் படத்தையும் தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் படத்தையும் கிழித்து எறிந்த சம்பவம் நடந்தது. இதற்கு காரணம் பரவலாக கட்சியினரிடையே பேசியது என்னவென்றால் வேட்பாளர் இல்லாமல் ஏன் பிரச்சாரம் செய்த என் செய்ய வந்தீர்கள் என்று அந்தக் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்தும் நிலக்கோட்டை தொகுதி பக்கம் தேர்தல் பிரச்சாரத்திற்காக தேமுதிக வேட்பாளர் ராமசாமி வராதது அக்கட்சியினர் மத்தியிலும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏன் தேமுதிக வேட்பாளர் ராமசாமி பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று கேட்டால் உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறப்படுகிறது. தேமுதிக வேட்பாளர் ராமசாமி பிரச்சாரத்திற்கு வராமல் இருப்பது மிகப்பெரிய அளவில் அந்த கட்சியினரிடையே இந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

படம் விளக்கம் : ஜம்பு துரை கோட்டை பகுதியில் வேட்பாளர் இல்லாமல் முதல் நாள் கட்சியினர் மட்டும் வாக்குகள் சேகரித்தபோது எடுத்த படம். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com