Home செய்திகள் நிலக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியின் வேட்பாளராக வசந்தா தேவியை அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களாக நிலக்கோட்டை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று வேட்புமனு நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் வழங்கினார். அப்போது உடன் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சுப்பையா, நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் சங்கிலி பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர் சின்ன மாயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம் நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வசந்தா தேவி வேட்பு மனுவை தாக்கல் செய்த போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com