Home செய்திகள் நிலக்கோட்டை தொகுதியில் அதிமுகவுக்கு பெருகி வரும் ஆதரவு. பெண்கள் அமோக வரவேற்பு

நிலக்கோட்டை தொகுதியில் அதிமுகவுக்கு பெருகி வரும் ஆதரவு. பெண்கள் அமோக வரவேற்பு

by mohan

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் கடந்த பல ஆண்டுகளாகவே அதிமுகதான் வெற்றி பெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதை கருத்தில் கொண்ட அதிமுக தலைமையிடம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ் . தேன்மொழி சேகர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தற்போது வரை இருந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களாக நிலக்கோட்டை தொகுதியில் உள்ள மைக்கேல் பாளையம் , பச்ச மலையான்கோட்டை, ஜம்பு துறைக்கோட்டை , பள்ளபட்டி, சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதற்கு நிலக்கோட்டை தொகுதியில் பெண்கள் ஆதரவு அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வேட்பாளருக்கு எங்கு சென்றாலும் பெண்கள் அமோக வரவேற்பு அளித்து தமிழ் நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபடுவோம் என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதே போன்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தற்போது திமுக கூட்டணி அங்கம் பெற்றுள்ள மக்கள் விடுதலை கட்சி நிர்வாகி முருகவேல் ராஜனுக்கு நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் திமுகவில் இருந்து ஏராளமான திமுகவினர் விலகி அதிமுக நிர்வாகிகள் முன்னிலையில் அதிமுக ஆதரவு தருவதாக தெரிவித்து கூட்டம் கூட்டமாக சேர்ந்து வருகிறார்கள் இதனால் நிலக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். தேன்மொழி சேகர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாகப்பன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி, பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஒன்றிய நிர்வாகிகள் தவமணி, முனியாண்டி, மோகன்ராஜ், தங்கப்பாண்டி, செந்தில்குமார், ஜேசுராஜ் , காட்டு ராசா, தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com