Home செய்திகள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்.

by mohan

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் பேசியதாவது: எந்த ஒரு அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஜாதி, மதம் , மொழி இன வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிக்கும் போது கொள்கைகள் , திட்டங்கள், கடந்த கால பணிகள் பற்றி மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும், மாறாக தனிநபர் விமர்சனம் செய்தல் கூடாது. வேட்பாளர் கட்சி அலுவலகங்களை அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி வளாகங்களில் போன்ற இடங்களில் அமைக்கக்கூடாது. அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் அதிகாரிகளின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து அரசியல் கட்சியினர் முன்பு பேசினார். இக்கூட்டத்தில் தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் அழகர்சாமி பேசியதாவது: தற்போது தேர்தல் ஆணையம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என புதிதாக உத்தரவு போட்டுள்ளது. இந்த ஓட்டு எவ்வாறு 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவது குறித்து விளக்கம் அளிக்கவும் என கேட்டார். தாசில்தார் சுப்பையா கூறியதாவது: தேர்தல் ஆணையம் மிகவும் தெளிவாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கு என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதன்படி மிகத்தெளிவாக அதிகாரிகள் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் முன்னிலையில் தபால் ஓட்டுக்கள் பெற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் அ.தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் சிமியோன்ராஜ், ஜேசுராஜ், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர்கள் கருத்தபாண்டி, பழனி, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சௌந்தரபாண்டியன், தே.மு.தி.க நகர செயலாளர்கள் சவுந்தரபாண்டியன்,அல்ட்ரா சுரேஷ், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கோவிந்தராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடந்த போது எடுத்த படம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com