சசிகலாவிற்கு பயந்து அ. தி. மு. க தலைமை அலுவலகத்திற்கு பூட்டு உதயாநிதி ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேற்பட்ட அ. தி. மு. க. வினர் சசிகலாவிற்கு பயந்து அதிமுக தலைமை அளவிற்கு பூட்டு போட்டு வைத்துள்ளார்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.தி. மு. க . இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்னும் பிரசாரத்தையோட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் கடந்த 2 நாட்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் நிலக்கோட்டை வருகை தந்தார். அப்போது தி.மு.க மாநில துணை பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஜ. பெரியசாமி தலைமையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி ஆகியோர்கள் முன்னிலையிலும், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், நிலக்கோட்டை தி. மு. க ஒன்றிய செயலாளர் (தெற்கு ) மணிகண்டன், நிலக்கோட்டை ஒன்றிய தி. மு. க ஒன்றிய செயலாளர் (வடக்கு) சௌந்தரபாண்டியன், நகரச் செயலாளர் கதிரேசன், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், காங்கிரஸ் கட்சி மகளிர் மாநிலத் தலைவி ஜான்சிராணி, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோகுல்நாத், நகர துணைச் செயலாளர்கள் ஜோசப் , முருகேசன், மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நிலக்கோட்டை நான் ரோட்டில் வரவேற்பளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தி. மு. க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு தமிழகத்திற்கு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்த நோக்கம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இல்லை. எப்படியும் தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் உடைய கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு தமிழகத்திற்கு வருகை புரிந்து தேர்தலை மனதில் வைத்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுவும் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை சேவைகளுக்காக தமிழகம் பின் வழங்கக்கூடிய நீதியை முறையாக வழங்காமல் பெயரளவில் சும்மா நிதியை ஒதுக்கி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் நரேந்திர மோடி. தமிழகத்திற்கு கொடுக்கக்கூடிய ஜி. எஸ். டி வரியை மத்திய அரசு இதுவரை கொடுக்கவில்லை எனவும் , அப்படி இருக்கையில் இன்றைக்கு தமிழகத்திற்கு நரேந்திர மோடி வருகை புரிந்தது நரேந்திர மோடியின் அடிமைகளாக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களின் கபட நாடகத்தின் உச்சம் தான் இது. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் பல மேடைகளில் தினம்தோறும் தமிழக மக்களை கேலிக்கூத்தாக நினைத்து கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி உளறிக் கொண்டு வருகிறார்கள் தமிழகத்திலுள்ள அனைத்து அமைச்சர்களும், தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் முறை ஊழலின் உச்சகட்டத்தில்தான் தற்போது நடைபெற்று வருகிறது. சசிகலாவிற்கு பயந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கும், பல்லாயிரம் கோடி செலவழித்து கட்டிய ஜெயலலிதா நினைவு மண்டபம் உள்ளிட்ட முக்கிய அ.தி.மு.க . அலுவலகங்களை அதுவும் அ.தி.மு.க நிர்வாகிகளை பூட்டுப் போட்டு பூட்டி வைத்துள்ள வேடிக்கையை தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடியும். நிலக்கோட்டை தொகுதியை பொருத்தவரை பல்வேறு அடிப்படை பணிகள் செய்யவில்லை என்றும் விவசாயிகளின் கோரிக்கையான ராஜ வாய்க்கால் மூலமாகவும், புல்வெட்டி கண்மாய் வழியாக புதிய கால்வாய் அமைக்கவும், தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் நின்று தான் முதலமைச்சர் ஆனாரா? என பொதுமக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பினார்.அதன் பின்னர் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சராய் தேர்வு செய்யப்பட்ட அந்த காட்சியை படத்தை எடுத்து மக்கள் மத்தியில் தமிழக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் ஆனார் என்ற காட்சி படத்தை காண்பித்து பேசினார்.. நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை தி.மு.க பல ஆண்டுகளாக கைப்பற்றாமல் இருக்கிறது என்பது நன்கு தெரியும். இதே மக்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவு வாக்களித்து திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிக வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்தீர்கள் என்பதை மறுக்க முடியாது. அதேபோன்று நடைபெற இருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலில் நிலக்கோட்டை தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிலக்கோட்டை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பூச்செண்டு தொழிற்சாலை அமைக்கவும், இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை திமுக ஆட்சி அமைத்தவுடன் நிச்சயமாக செய்து தர இந்த தருணத்தில் வாக்குறுதி அளிக்கிறேன் என பேசினார். இதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை நால்ரோட்டில் வைத்திருந்த நிலக்கோட்டை காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் திருவுருவ படத்திற்கும் , மறைந்த முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் மு கருணாநிதி உருவப்படத்திற்கு திறந்தவெளியில் இருந்து கீழே இறங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா