சொக்குபிள்ளைபட்டியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளைபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் துர்கா வயது 17 . இவர் அணைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். வேணா விடுமுறை என்பதால் வீட்டில் டிவி பார்ப்பது மற்றும் விளையாடுவது என இருந்துகொண்டு வீட்டு வேலையை சரிவர செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது தாயார் கவிதா திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பேனில் துப்பட்டாவை கழுத்தில் மாட்டிக் கொண்டு தூக்கில் தொங்கினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் உடனடியாக பார்த்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீர சோலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இக்கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் பள்ளி மாணவி இறந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா