Home செய்திகள் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து சாலையாக மாறியகண்மாய்.

ஓடையை ஆக்கிரமிப்பு செய்து சாலையாக மாறியகண்மாய்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபட்டி ஊராட்சி இப்பகுதியில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டுமே சார்ந்த பகுதியாகும் இப்பகுதியில் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து மழை விழும் பொழுது அங்கிருந்து வரும் தண்ணீரானது பிள்ளையார் நத்தம் ஊராட்சி பேரூராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகள் இடையே அமைந்துள்ள வாளைங்கோட்டை புதுக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் இக்குளத்தில் வரும் தண்ணீரை வைத்து இப்பகுதியில் உள்ள குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் விவசாயத்திற்கு ஊராட்சி நிர்வாகமும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் புது குளத்திற்கு கண்மாய்க்கு வரும் வரத்து வாய்க்காலை  திடீரென ஒரு சிலர் வாய்க்காலை ஆக்கிரமித்து அதன் கரைகளை உடைத்து அவர்கள் விவசாயத்திற்கு செல்லும் பாதையாக மாற்றியுள்ளனர் இதையறிந்த அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக அவர்களிடம் சென்று வரத்து வாய்க்கால் உடைப்பு சாலை அமைத்து உள்ளீர்கள் உடனடியாக வரத்து வாய்க்கால் அமைத்து கொடுங்கள் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி வரத்து வாய்க்காலை முழுவதுமாக உடைத்து சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு தனியார் தோற்றத்திற்காக சாலையை அமைத்துள்ளனர் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து ஏற்கனவே தண்ணீர் அருகிலுள்ள ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குளங்கள் தண்ணீர் நிறைந்து உள்ளது ஆனால் இந்த குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால் தண்ணீர் வீணாக செல்கிறது இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் அளித்து எந்த பயனும் இல்லை தற்போது ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வரத்து வாய்க்காலை உடைத்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வரத்தை வாய்க்காலை சரி செய்து தர வேண்டும் என்று கூறி நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com