Home செய்திகள் நிலக்கோட்டை அருகே 70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

நிலக்கோட்டை அருகே 70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள சுட்டி காலடிபட்டியிலிருந்து நிலக்கோட்டை வள்ளி நகர் வரையும, ராயப்பன் பட்டியில் இருந்து அவையம்பட்டி வரை தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டு ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பாக 70 லட்ச ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ் , செல்வராஜ் , நகர பொறுப்பாளர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com