Home செய்திகள் மருத்துவமனை சென்று இருந்த போலீசார் வீட்டில் 85 பவுன் நகை கொள்ளை

மருத்துவமனை சென்று இருந்த போலீசார் வீட்டில் 85 பவுன் நகை கொள்ளை

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் முத்து ரமேஷ் இவர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் காவலராக பணி செய்து வருகிறார் அதேபோல் இவரது தந்தையும் காவல்துறையில் துணை ஆய்வாளராக பணி செய்தவர் இந்நிலையில் காவலர் முத்து ரமேஷின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் இதனால் நேற்று திண்டுக்கல் இலேயே தங்கியுள்ளனர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுநகை மற்றும் பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலையில் பார்த்த பொழுது வீட்டுக் கதவும் உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்து உடனடியாக காவல் துறையினருக்கும் மற்றும் வீட்டு உரிமையாளர் காவலர் முத்து ரமேஷ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் வீட்டை பார்வையிட்டனர் அப்போது வீட்டின் உரிமையாளர் காவலர் முத்து ரமேஷ் தனது வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை என விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் வீட்டிலேயே 85 பவுன் நகை கொள்ளை மேலும் வத்தலகுண்டு சோழவந்தான் சாலையில் 24 மணி நேரம் போக்குவரத்து உள்ள இடத்தில் இருக்கும் வீட்டிலேயே மர்ம நபர்கள் கொள்ளையடித்து இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இச்சம்பவம் குறித்து விளாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நிலக்கோட்டை செய்தியாளர ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com