நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பிறந்த தினத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய 500 குழந்தைகளுக்கு அன்னதானம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவரும், நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளருமான யாகப்பன் சார்பாக நிலக்கோட்டை அருகே உள்ள தமியான் ஆசிரமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும், மனவளர்ச்சி குன்றிய ஆதரவற்ற குழந்தைகளுக்கு சுமார் 500 பேர்களுக்கு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும் , திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான விசுவநாதன் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர்,  வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், குணசேகரன, தமியான் நிர்வாகி ஆக்ஸை் சேவியர் . மாவட்ட கவுன்சிலர் ராஜா, கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் விஜயபாலமுருகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி. நகர பொறுப்பாளர் முத்து, அண்ணாமலை, முனியப்பன, உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா