Home செய்திகள் நிலக்கோட்டையில் சட்ட உதவி மையத்தில் நுழைந்தது பாம்பு அரண்டு ஓடிய அதிகாரிகள்

நிலக்கோட்டையில் சட்ட உதவி மையத்தில் நுழைந்தது பாம்பு அரண்டு ஓடிய அதிகாரிகள்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டையில் தாலுகா அலுவலகம் , நிலக்கோட்டை நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம் , பொதுப்பணித்துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா மாவட்ட கல்வி துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்த அலுவலக நிலக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் நுழைவாயில் நிலக்கோட்டை இலவச சட்ட உதவி மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இ ந்த அலுவலகத்தில் நேற்று மாலை 3 மணியளவில் பாம்பு திடீரென உள்ளே நுழைந்தது. பாம்பை பார்த்த பெண் ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அவற்றை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த  தகவல் அறிந்த தீயணைப்பு நிலை அலுவலர் ஜோசப் தீயணைப்பு வீரர்களுடன் நிலக்கோட்டை  சட்ட அலுவலகத்தில் புகுந்த பாம்பை சுமார் 2 மணி நேரம் போராடி பிடித்தனர். ஒருவழியாக பாம்பை பிடித்த பின்பு அங்கு இருந்த அதிகாரிகளும் அங்கிருந்த பெண் ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்ட பாம்பு வனத்துறை பகுதியில்  விடப்போவதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com