நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீரென ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று தமிழகத்தின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் திடீர்னு தானே நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய மேலாளர் பாலகிருஷ்ணனிடம் ஒன்றியத்தில் தமிழக அரசுப் தற்போது வழங்கப்பட்டுள்ள பசுமை வீடு, மத்திய அரசு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் நடைபெறும் கட்டிட வேலைகள் குறித்து கேட்டறிந்தார். ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் விவரமாக கேட்டறிந்தார். பின்னர் ஒன்றியத்தில் முறையாக அனைத்து பணிகளும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், கூவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் சேசுராஜ், குமார், மைக்கேல் பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜோசப் உள்பட பலர் உடன் இருந்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

உதவிக்கரம் நீட்டுங்கள்..