நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் வெல்டிங் உள்ளிட்ட பொருட்களை திருடிய கூலி தொழிலாளி கைது

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அருகே உள்ள  வீலிநாயக்கன்பட்டி பகுதியில் தவயோகி ஞானபீட பாரதியின் பெயரில் ஒரு மடம் உள்ளது. இந்த மடத்தின் பொறுப்பாளர்  பவித்ரா  வயது 34. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மடத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் சக்திவேல் வயது 32, இவரும் இவருடன் சேர்ந்து வேலை பார்த்த கோயம்புத்தூரைச் சேர்ந்த மஞ்சுநாதன் ஆகிய 2 பேர்களும் மடத்தில் ஆளில்லாத நேரத்தில் மடத்தில் இருந்த 2 மோட்டார் சைக்கிள், மற்றும் வெல்டிங் இயந்திரம், மற்றும் கட்டிட வேலை செய்யக்கூடிய இயந்திர 92 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பொருட்கள் திருடிச் சென்று விட்டதாக என  நிலக்கோட்டை  சப் இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனிடம் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று சக்திவேலை நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து போலிஸார் கைது செய்தனர். பின்னர் சக்திவேலிட மிருந்து வெல்டிங் மிஷின் ,மற்றும் கட்டிட வேலை செய்யக்கூடிய  22  ஆயிரம்மதிப்புள்ளஇயந்திரங்களை கைப்பற்றி  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோயம்புத்தூரைச் சேர்ந்த மஞ்சுநாதனை நிலக்கோட்டை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

உதவிக்கரம் நீட்டுங்கள்..