நிலக்கோட்டையில் தேமுதிகவின் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்ட பெண்கள்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் செயலாளர் எம்.வெள்ளைச்சாமி, தான் சார்ந்திருக்கும் கட்சிப் பணிகளில் அதிகளவில் ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருபவர்.
கேப்டனின் மறைவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
மேலும் கட்சித் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நிலக்கோட்டை பகுதியில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஜவகர் அறிவுறுத்தலின் பேரில், சிலுக்குவார் பட்டியைச்சேர்ந்த ஈஸ்வரி மற்றும் பள்ளப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராணி மற்றும் சிலர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி முன்னிலையில் தங்களை தேமுதிகவின் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் தேமுதிகவின் நிலக்கோட்டை பேரூர் கழகச் செயலாளர், ஜவுளி முருகன், மகளிரணி ஒன்றிய துணைச் செயலாளர் ராணி, கேப்டன் மன்ற ஒன்றியச் செயலாளர் கருப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.