வள்ளல் சீதக்காதி சாலையில் விலை குறைப்பில் கிடாக் கறி விற்பனை துவக்கம் – கிலோ ரூ.440

கீழக்கரையில் கடந்த டிசம்பர் மாதம் திடீர் என கிடாக் கறி விலை ரூ440 ல் இருந்து ரூ.500 ஆக ஒரே நாளில் உயர்ந்தது. இதனால் ஏழை எளிய பொதுமக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் மன உளைச்சல் அடைந்தனர். மேலும் நகரின் அசைவ பிரியர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இது சம்பந்தமாக கீழக்கரை நகரில் உள்ள பொது அமைப்பினர் மற்றும் சமுதாய அமைப்பினர் வட்டாட்சியருக்கு புகார் மனு செய்தனர். ஆனால் தீர்வு எட்டப்படாத சூழலில் கீழக்கரை நகர் SDPI கட்சி சகோதரர்களின் பெரும் முயற்சியால் கீழக்கரை தம்பி நெய்னா பிள்ளை தெருவில் குறைந்த விலையில் கிடாக்கறி விற்பனை நிலையம் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு பழைய டெலிபோன் அலுவலகம் எதிரே திறக்கப்பட்டது. இது சம்பந்தமாக நம் கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

கீழக்கரையில் குறைந்த விலையில் கிடாக் கறி விற்பனை துவக்கம் – கிலோ ரூ.440 – பொதுமக்கள் மகிழ்ச்சி

இருப்பினும் நகரின் மத்திய பகுதிக்குள், பொதுமக்கள் அனைவரும் வந்து வாங்கி செல்ல ஏதுவாக மேலும் ஒரு கடையை திறக்க கிடாக்கறி கடை உரிமையாளருடன் இணைந்து SDPI கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று வள்ளல் சீதக்காதி சாலையில், ராவியத் ஸ்வீட் கடை எதிர்புறம் குறைந்த விலையில் கிடாக் கறி விற்பனை நிலையம் துவங்கப்பட்டு கிலோ ரூ.440 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#Paid Promotion