வெடிகுண்டு பிரிவிற்கு புதிய மோப்பநாய் டயானா பணியில் சேர்ப்பு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளான கொலை¸ கொள்ளை போன்ற வழக்குகளில் துப்பறிவு பிரிவு போலீசாருக்கு உதவியாக ஜீலி மற்றும் ரோமியோ ஆகிய இரு மோப்பநாய்கள் உள்ளன. இதுபோன்று வெடிகுண்டு சோதனை பிரிவிற்கு வெடிகுண்டுகளை கண்டறிய டயானா என்ற மோப்பநாய் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டயானாவிற்கு இதற்கான 6 மாத பயிற்சியினை கோவையில் உள்ள பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களிடம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.நாகசாந்தி மற்றும் பயிற்சியாளர் திரு.அருண்சந்திரபோஸ் ஆகியோர் டயானாவை அறிமுகம் செய்து பணி ஆணையினை பெற்றுக்கொண்டனர்.

செய்தி:- ஃபக்ருதீன்