இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் குடியிருப்போர் நலச்சங்கம் நிர்வாகிகள் தேர்வு …

இராமநாதபுரம் மாவட்டம் பட்டணத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்மநாதசுவாமி நகர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவராக ஆறுமுகம் அவர்கள் தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  பொதுக்குழு மூலம் செயலாளராக செல்லப்பா துணைத் தலைவராக ராமராஜ், பொருளாளராக ஜெயசீலன், உதவிச் செயலாளராக விஜய பாண்டியன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிர்வாகிகள் தேர்தலில் தலைவருக்கு மட்டும் போட்டியிருந்ததால் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆறுமுகம், ராமச்சந்திரன், தட்சிணாமூர்த்தி, ஆகியோர்கள் போட்டியிட்டதில் மீண்டும் தலைவராக ஆறுமுகம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இவருக்கு அனைத்து குடியிருப்பு சார்ந்த பொது மக்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடைபெறும் மூன்றாவது முறையாக மீண்டும் தலைவராக ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார். சாலை வசதி ,குடிநீர் , மின்சாரம் ஆகிய அடிப்படை தேவைகளை முழுமையாக உடனே செய்ய பாடுபடுவேன் என்று தலைவர் தெரிவித்தார் தேர்தலை சவுந்திரபாண்டியன் குமார் மற்றும் அண்ணா துரை ஆகியோர்கள் நடத்தினர்.