Home செய்திகள் வீரசிகாமணி ஊராட்சி பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி முகாம்;பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

வீரசிகாமணி ஊராட்சி பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி முகாம்;பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

by mohan

தமிழகத்தில் கொரோனா 2-ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் மக்களின் சிரமத்தை போக்க பல நல்ல திட்டங்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் கோவிட்-19 தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

ஊராட்சி திருமண மண்டபத்தில் வைத்து 27.05.21 வியாழக் கிழமை நடந்த இந்த முகாமில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். காலை 10 மணி முதல் துவங்கிய இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த பணியின் இடையே தடுப்பூசி காலியான நிலையில் மேலும் கூடுதலாக 120 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு முகாம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த முகாமில் 180 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் வீரசிகாமணி ஊராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தது. கலந்து கொண்டவர்கள், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வீரசிகாமணி ஊராட்சி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டு முகாம் நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com