நெல்லையில் நம்மாழ்வார் நினைவு தின கருத்தரங்கம். இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் கலந்து கொண்டு சிறப்புரை..

நெல்லையில் நம்மாழ்வார் நினைவு தின கருத்தரங்கம். இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் கலந்து கொண்டு சிறப்புரை..

நெல்லையில் நம்மாழ்வார் 10 ம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம் பாளையங்கோட்டை சாராள் டக்கர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர்.உஷா காட்வின் தலைமை தாங்கினார். செல்வி. மெர்ஸி கஜேந்தினி வரவேற்புரை ஆற்றினார். நெல்லை நம்மாழ்வார் இயற்கை சந்தை தலைவர் அருட்பணி . மை.பா.சேசுராஜ் அறிமுக உரையாற்றினார். பிளாசம் அக்ரோ இண்டஸ்டிரிஸ் நிர்வாக இயக்குநர் ஜான் கிருபாகரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருத்தினராக இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் கலந்து கொண்டு இயற்கை வழி விவசாயம், இயற்கை வாழ்வியல் முறை குறித்து மாணவிகளுக்கு கருத்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியை பேட்டை ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் முனைவர் ஜெயமேரி நெறியாளுகை செய்தார். நிகழ்ச்சியில் சுய உதவிக் குழுக்கள் மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்கள், சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை நம்மாழ்வார் இயற்கை சந்தை செயலாளர் சகோ.ஜெபசிங் நன்றி கூறினார்