Home செய்திகள்உலக செய்திகள் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்; தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம்..

கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்; தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம்..

by Abubakker Sithik

கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும்; நெல்லையில் நடந்த தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம்..

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும் என நெல்லையில் நடந்த தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம் இணைந்து பாளையங்கோட்டை வ. உ .சி .மைதானம் பின்புறம் உள்ள ஐயம்பெருமாள் அரங்கில் கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பில் கவியரங்கமும், உ.வே.சா.விருது பெற்ற எழுத்தாளர் இரா.நாறும்பூநாதனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் முத்தமிழின் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவருடைய நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் இயற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது பெற்ற எழுத்தாளர் இரா. நாறும்பூநாதனுக்கு பாராட்டு நிகழ்வுக்கு கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் முனைவர் இரா. முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் தளவாய் இரா. நாதன் முன்னிலை வகித்தார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா வரவேற்றுப் பேசினார். திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக் குழு உறுப்பினர் சுப.சீதாராமன், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கத்தினைச் சார்ந்த தாமிரபரணி இலக்கிய மாமன்ற அமைப்பாளர் கவிஞர் வ. பாமணி, திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் கவிஞர் ந.ஜெயபாலன், பாளையங்கோட்டை அரும்புகள் அறக்கட்டளை நிறுவுநர் முனைவர் இராஜ.மதிவாணன், சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழாசிரியர் கழகத் தலைவர் சங்கரன்கோவில் சங்கர்ராம், நெல்லை திருவள்ளுவர் கழக நிறுவுநர் சித்த மருத்துவர் மு.பரமசிவன், தூத்துக்குடி திருக்குறள் மைய அமைப்பாளர் மோ.அன்பழகன், கழுகுமலை திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் பொன் பாண்டியன், முருகன், கன்னியாகுமரி பாரதியார் சங்க செயலாளர் முனைவர் கே.எல்.எஸ்.கீதா, மதுரை தமிழக கலை சங்கம தலைவர் திண்டுக்கல் அ.ஷாஜஹான், பாளையங்கோட்டை திருக்குறள் தகவல் மையத் தலைவர் முனைவர் வை.இராமசாமி உட்பட பல தமிழ்ச் சங்கங்களின் அமைப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் பல தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்கள்.

நிலைத்த புகழோடு நீடு வாழ்கிறார் என்ற தலைப்பிலான கலைஞர் தமிழ்-100 கவியரங்கில் கவிஞர் மு.முத்துக்குமார், முனைவர் சரவணக்குமார், சிறுமி வே. காயத்ரி, காயல் அருள், உமா அரிராஜலு, இளங்கவிஞர் சூடாமணி, சுப்பிரமணியன், ஆறுமுகம் உள்பட பலர் கவிதை வாசித்தனர். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன. எழுத்தாளர் இரா. நாறும்பூநாதனுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக அதன் நிறுவுநர் கவிஞர் பேரா நினைவுப் பரிசாக கலைஞரின் பேனாவுடன் பொன்னெழுத்துகள் பொறிக்கப்பட்ட ஷீல்டினை வழங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் பா. இராமகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். கவிஞர் மு.முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com