Home செய்திகள் நெல்லையில் கட்டணமில்லா மகளிர் சுய தொழில் பயிற்சி வகுப்புகள்..

நெல்லையில் கட்டணமில்லா மகளிர் சுய தொழில் பயிற்சி வகுப்புகள்..

by mohan

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு நடந்தது. நெல்லை அரசு அருங்காட்சியகமும் திருநெல்வேலி வேஸ்ட் ரோட்டரி கழகமும் இணைந்து மகளிர் இலவச மகளிர் சுய தொழில் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின. நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். ரோட்டரி வருங்கால ஆளுநர் முத்தையா பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் ரேமண்ட் பாடிரிக் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி வேஸ்ட் ரோட்டரி கழகத்தின் தலைவர் இசக்கி, செயலர் நிர்மலாதேவி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் பயிற்சியாளர் விஜயா வீட்டில் இருந்தபடி சோப்பு தயாரிக்கும் பயிற்சி வகுப்பினை நடத்தினார் .நெல்லை மாவட்டத்தை சார்ந்த 20 பெண்மணிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு சோப்பு தயாரித்தனர். மகளிர் வீட்டில் இருந்தபடி சுய தொழில் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com