Home செய்திகள் தென்காசி பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம்; தலைமை நீதிபதி திறந்து வைத்தார்..

தென்காசி பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம்; தலைமை நீதிபதி திறந்து வைத்தார்..

by mohan

தென்காசி பகுதியில் ரூ. 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தை நெல்லை மாவட்ட தலைமை நீதிபதி நசீர் அகமது திறந்து வைத்தார். புதியதாக தென்காசி மாவட்டம் உதயமாகி உள்ள நிலையில், குற்றவியல், உரிமை இயல் நீதிமன்றங்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டுமென முந்தைய ஆட்சிக்காலத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்த 2005-2011 திமுக ஆட்சிக்காலத்தில் கலைஞர் கருணாநிதியால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரூ. 14 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் நிதி ஒதுக்கீடு தென்காசி திருநெல்வேலி சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட. கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை திருநெல்வேலி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றங்களின் நீதிபதி நசீர் அகமது நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து நீதிபதி நசீர் அகமது, தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். முன்னதாக விழாவில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றங்களின் நீதிபதி நசீர் அகமது பேசியதாவது: தற்போது மாவட்ட அளவில் அதிகமான குற்ற வழக்குகள் அதிகரித்து வருகிறது. கீழமை நீதிமன்றங்கள் என்பது முழு கட்டிடத்தை தாங்கும் அடித்தளம் ஆகும். ஆகவே கீழமை நீதிமன்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இடமாக கருதப்படுகிறது. எனவே மக்களின் முழு நம்பிக்கையாக நீதிமன்றம் இருக்கிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, முதன்மை சார்பு நீதிபதி ரஸ்கின் ராஜ், கூடுதல் சார்பு நீதிபதி காமராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமிதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சர்மிளா, நீதித்துறை நடுவர் பிரகதீஸ்வரன், தென்காசி பார் அசோசியேஷன் தலைவர் செல்லத்துரை பாண்டியன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் எம்ஆர்கே.பாண்டிராஜ், மூத்த வழக்கறிஞர் என்.கனகசபாபதி, தென்காசி மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கார்த்திக் குமார், மற்றும் அரசு வழக்கறிஞர்கள் முருகன், இருதயராஜ், மாரிக்குட்டி, அன்புச்செல்வன், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com