Home செய்திகள் கடையம் பகுதியில் நடந்த இரத்ததான முகாம்;மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

கடையம் பகுதியில் நடந்த இரத்ததான முகாம்;மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

by mohan

கடையம் பகுதியில் இரத்ததான முகாம் நடந்தது. இதில் ஆர்வத்துடன் இரத்தம் வழங்க முன் வந்த மாணவர்களை தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் வெகுவாக பாராட்டினார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. கடையம் கீழ மாதாபுரம் எவர்கிரீன் ITI யில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமி நாத் மற்றும் கோலார் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் மற்றும் எவர்கிரீன் ஐடிஐ நிர்வாகி V.P. தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின், அரசு மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் S.S. ராஜேஷ்,ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் பாபு மற்றும் கடையம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் பழனி குமார் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் பற்றியும் மருத்துவ சேவைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து இரத்ததான சேவையில் ஈடுபட்டுவரும் ஒருங்கிணைப்பாளர்கள், கடையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் குயின் ஷீபா, பரமானந்தம், தென்காசி ரத்த வங்கியின் செவிலியர்கள் உத்தம வர்த்தினி,பதர்நிஷா, ஆய்வக நுட்புனர் ஹரிஹர முத்து மற்றும் கடையம் ஆலோசகர் ராஜ பிரியதர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டு ரத்ததான முகாமினை சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ரத்த வகை பிரிவு கண்டறியப்பட்டு பின்னர் அவர்களிடமிருந்து ரத்தம் பெறப்பட்டது. இளம் வயதில் ஆர்வத்துடன் ரத்தம் கொடுக்க வந்த மாணவர்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் வெகுவாக பாராட்டியதோடு ரத்தம் கொடுப்பதினால் உண்டாகும் நன்மையையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com