Home செய்திகள் தென்காசியில் புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நடந்த மாபெரும் மாரத்தான் போட்டி..

தென்காசியில் புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நடந்த மாபெரும் மாரத்தான் போட்டி..

by mohan

தென்காசியில் புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி மாபெரும் மாரத்தான் போட்டி நடந்தது. இதில் அதிகமான அளவில் போட்டியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் பசுமை வலசை இயக்கம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் மாரத்தான் போட்டி (14.04.2022) வியாழக்கிழமை நடந்தது. தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த மாரத்தான் போட்டியை DSP மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார். புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நடந்த இந்த மாராத்தான் போட்டியில், ஆண்கள் 10 கி.மீ வரையும், பெண்கள் 6 கி.மீ வரையும் ஓடினர். மாரத்தான் ஓட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் முடிவடைந்தது. இதில் அதிகமான அளவில் போட்டியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் IPS பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!