Home செய்திகள் நெல்லையில் புத்தொளி பயிற்சி; அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்..

நெல்லையில் புத்தொளி பயிற்சி; அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்..

by mohan

நெல்லையில் ஏப்ரல்.19 முதல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரும் பொருட்கள் பாதுகாப்பு குறித்த புத்தொளி பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான கல்வி பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை 5 நாட்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரும் பொருட்கள் பாதுகாப்பு பற்றிய உள் விளக்க பயிற்சி/புத்தொளிப்பயிற்சி ( Internship training) அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் இளநிலை மற்றும் முதுநிலை வரலாறு, தமிழ் துறை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்களான பழங்கால கற்சிலைகள், உலோக கைவினைப் பொருடகள், மரசிற்பங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற அரும் பொருட்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றிய செய்முறை பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. பயிற்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் கட்டாயம் தங்களின் பெயர்களை 17/04/2021ஆம் தேதிக்கு மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவ மாணவிகள் கட்டாயம் தங்களின் துறை தலைவரின் முன் அனுமதி கடிதத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். முன்பதிவு மற்றும் இதர விபரங்களுக்கு 7502433751 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!