திருநெல்வேலி மாநகராட்சியில் நடந்த முதல் மாமன்ற கூட்டத்தில் மேலப்பாளையம் 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரசூல்மைதீன் பொதுமக்களின் அடிப்படை வசதி உள்ளிட்ட முக்கிய தேவைகள் குறித்து விளக்கி பேசினார். திருநெல்வேலி மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் 11.4.2022 திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜு, ஆணையாளர் விஷ்ணு முன்னிலை ஆகியோர் வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். மேலப்பாளையம் மண்டலம் 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரசூல்மைதீன் பங்கேற்று 50-வது வார்டு பொதுமக்களின் முக்கிய தேவைகளான ஹாமீம்புரம், ஞானியார் அப்பாநகர், சித்திக் நகர், நேரு நகர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நீக்கி சீராக குடிநீர் விநியோகம் செய்தல், வி.எஸ்.டி. பள்ளிவாசல் முதல் அன்னை ஹாஜரா கல்லூரி வரை சாலை அமைத்தல், வார்டில் அனைத்து தெருக்களிலும் சாலை வசதி செய்து தருவது, வார்டின் அனைத்து தெருக்களிலும் தூய்மை பணி சிறப்பாக நடைபெற்றிட தூய்மை பணியாளர்களை வார்டிற்கு அதிகப்படுத்துதல், வார்டில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு தூரத்தில் உள்ள பெருமாள் புரம் சுகாதார நிலையத்திற்கு சென்று வந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆகவே வார்டு பகுதியிலேயே ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், மாட்டு சந்தை முதல் அன்னை ஹாஜரா கல்லூரி வரை பாத்திமா நகர், பூங்கா நகரை ஒட்டி செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதி மற்றும் ஞானியார் அப்பாநகர் நகர் 8வது தெரு, ஞானியார் அப்பாநகர் குறுக்கு தெரு, (ஹாமீம்புரம் வடக்கு தெரு வழி) அன்னை ஹாஜரா சாலையில் உள்ள ஞானியார் அப்பா B காலனி நேரு நகர் 3வது தெரு, சித்திக் நகர் முதல் தெரு பாத்திமா நகர் ஆகிய தெருக்களிலும் குறிப்பிட்ட மின் கம்பங்களில் மின் விளக்கு வசதி செய்தல், அனைத்து கழிவு நீர் ஓடைகளையும் தூர்வாருதல், தெருக்களில் பொது நல்லிகள் அமைத்தல், வார்டிற்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் உள்ள பழுதான அடிபைப்புகள், பொது நல்லிகளை சீரமைப்பு செய்தல், உபயோகத்தில் இல்லாத சிறிய வகை நீர் தேக்க தொட்டிகளை அப்புறப்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்து கோரிக்கைகளை விரைவாக செய்து தர வலியுறுத்தி மாமன்றத்தில் பேசினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக் 95
You must be logged in to post a comment.