Home செய்திகள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை உறுதிமொழியேற்பு..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை உறுதிமொழியேற்பு..

by mohan

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற “நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” நிகழ்ச்சியில் தூய்மையை மையமாக கொண்டு முக்கிய உறுதிமொழிகளை மருத்துவர்கள்,பணியாளர்கள் அனைவரும் ஏற்றனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் “நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற அரசின் புதிய திட்டத்தின் செயல்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் 1 ஆம் நாள் முதல் 30 ஆம் நாள் வரை மருத்துவமனையை சுத்தம் செய்து மருத்துவமனை வளாகத்தில் தூய்மையான சூழ்நிலையை உருவாக்க மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி மொழி ஏற்றனர். அதில் நம்நாட்டின் சுகாதாரம் பேணுவதற்கு தேவையான வழிமுறைகளை என்னால் முடிந்த வரை கடைபிடிப்பேன். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பேன். என்னைச் சார்ந்தவர்களிடமும் சுற்றுப்புறத் தூய்மையை பேணுவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறுவேன். சுற்றுப் புறத்தூய்மையால் நோயின்றி வாழலாம் என்பதை அறிவேன். தூய்மையான இந்தியா உருவாக பாடுபடுவேன் என என்று மனமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதி மொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா ஜெஸ்லின் (MBBS., D.Ortho.,) தலைமையில், மரு. வெங்கட்ட ரெங்கன் DCH., (இணை இயக்குனர் தென்காசி மாவட்டம்) முன்னிலையில் மருத்துவமனையின் உட்புறம் தொடங்கி சுற்றுப்புற பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் வெகுவாகவும் விரைவாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெறும் இப் பணிகளின் ஒரு பகுதியாக மருத்துவமனையின் வளாகத்தினுள் உள்ள காலி இடங்களில் உள்ள தேவையில்லாத புதர் செடிகள் மற்றும் களை செடிகளை நீக்கி சுத்தம் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டது.

தினமும் ஒவ்வொரு இடங்களாக மருத்துவமனையின் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து அதனை நேரில் சென்று பார்வையிட்டு முறையாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்திலுள்ள அனைத்து கட்டிடங்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களிலும் பழுதடைந்த சுவர் வெடிப்புகள் மற்றும் தளங்களை சரி செய்ய துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தினுள் காலி இடங்களில் எக்ஸ்னோரா என்ற பொது தொண்டு அமைப்புடன் இணைந்து புதிதாக மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும் விதமாக அனைத்து மருத்துவமனை பணியாளர்களுடன் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்பினை சிறப்புரையின் மூலம் மருத்துவர் கீதா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 250-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நூலினால் தயாரிக்கப்பட்ட மஞ்சள்பையை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் மரு வெங்கட்ட ரெங்கன், திருநெல்வேலி மாவட்ட இணை இயக்குனர் மரு .ஜான் பிரிட்டோ , மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு .இரா ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு. ராஜேஷ் ஆகியோர் இலவசமாக வழங்கினர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் நலம் கருதி நோயாளிகள் மற்றும் நோயாளியின் உறவினர்களுக்கு சுத்தமான தண்ணீர் வழங்குவதற்காக அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் கிருமி நாசினி ( குளோரின் ) மூலம் கிருமி நீக்கம் செய்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மருத்துவமனை வளாகத்தினை மண்வெட்டி கொண்டு களை செடிகளை அகற்றி சுற்றுப்புறத்தினை தூய்மை படுத்தினர். மருத்துவமனையின் அனைத்து கட்டிடங்களையும் பராமரித்து புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளையும் பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பயன்பாட்டில் இல்லாத அனைத்து உபகரணங்களையும் கழித்தொழுக்ககம் செய்து, மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் (ஏப்ரல் 30) இந்த மாத கடைசி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com