Home செய்திகள் தென்காசி நல்லமணி யாதவா கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்..

தென்காசி நல்லமணி யாதவா கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்..

by mohan

தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தென்காசி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரியில் சனிக் கிழமை நடைபெற உள்ளது.இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 3000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள், இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணைகள், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கான பதிவு வழிகாட்டுதல்கள் (OMCL), இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் (வயது வரம்பு 18 முதல் 40 வரை ஆண் பெண் இரு பாலருக்கும்) ஆகியன இந்த முகாமின் சிறப்பம்சங்களாக உள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் “மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தென்காசி: 04633213179” என்ற முகவரியிலோ அல்லது www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்காசி மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடிக்குறிச்சியில் 26.03.2022 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, பி.இ.,டிப்ளமோ,ஐடிஐ படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் இத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவத்தின் மூலம் பதிவு செய்து வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு பெறலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன் பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லதுவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!