Home செய்திகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடந்த தொல்லியல் பயிலரங்கம்..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடந்த தொல்லியல் பயிலரங்கம்..

by mohan

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. இந்த பயிலரங்கம் நிகழ்வின் போது நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், அதனை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இளவேலங்கால் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நடுகற்கள் பற்றியும் மாணவிகளிடம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் மரபு நடைபயணமாக கிருஷ்ணாபுரம் கோயில் மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தொல்லியல் ஆய்வாளர் ஏதீஷ்குமார் அகழாய்வு பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது ஆய்வு மாணவர்கள் அருண் குமார் மற்றும் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர். இப் பயிலரங்கம் மற்றும் மரபுநடை பயணத்தில் ராணி அண்ணா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர்கள் உமாதேவி, சுதாமதி, சகாயமேரி ஆகியோர் உடன் வந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com