Home செய்திகள் போலி நிதி நிறுவனம் மூலம் 7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பெண் கைது..

போலி நிதி நிறுவனம் மூலம் 7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பெண் கைது..

by mohan

போலி நிதி நிறுவனம் நடத்தி 7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் அக்ரி இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான ராமசுதர்சன்,சந்திரன், கவிதா மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் சேர்ந்து 2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை,தர்மபுரி, மயிலாடுதுறை, கடலூர்,பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடத்தி மேற்படி நிறுவனத்தில் மாதாந்திர வருடாந்திர திட்டங்களில் பணம் செலுத்துபவர்களுக்கு கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளை பொதுமக்களிடம் கூறி நம்ப வைத்து விளம்பரப்படுத்தி முதலீடு செய்ய வைத்து பொதுமக்களிடம் ரூபாய் 7 கோடி வரை பணம் பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் கொடுத்த புகாரின் பேரில் திருநெல்வேலி பொருளாதார குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்யப்பட்டு ராம சுதர்சன், சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS அறிவுறுத்தியதின் பேரில் காவல் ஆய்வாளர் ரோஸ்லின் சேவியோ தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் ராமானந்த சிவகுமார், பெண் காவலர் இசக்கியம்மாள் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த கவிதா என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com